×

சென்னை ஜமாலியாவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னை ஜமாலியாவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்குகிறார்.

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணி மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு அடிகள் நாட்டும் விழா என 163 நிகழ்ச்சிகளில் முதல்வர் முக.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். அதன் முதற்கட்டமாக சென்னை பெரம்பூர்  ஜமாலியா பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்துவருகிறார். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிகுறிகளை வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து சென்னை டோன் பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 1,086 பேருக்கு இலவச மிதிவண்டிகளை வழங்குகிறார். தொடர்ந்து எஸ்.ஆர்.பி. கோவில் வடக்கு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிடுகிறார். அதனை அடுத்து பேப்பர் மில்ஸ் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும்  பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறார்.

இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கபாலீஸ்வரர் கலை மாறும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர்கள் மாறும் இரண்டாம் அணை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவிதொகை வழங்கும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்கிறார்.இதனை அடுத்து கொளத்தூர் எவர்வின் பள்ளி அருகில் உள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.

இதனை தொடர்ந்து கொளத்தூர் ஏரியை தூர்வாரும் பணி, மேம்படுத்தும் பணிகளுக்கு அடிகள் நாட்டுகிறார். இதனது அடுத்து நெடுஞ்சாலை துறை மூலம் கட்டப்படவுள்ள கொளத்தூர் 200 அடி சாலையில் இருந்து தணிகாசலம் நகர் கால்வாயில் இணைக்கும் பணிக்கு அடிகள் நாட்டுகிறார். இறுதியாக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 4 அறுவை சிகிச்சை அரங்கங்கள் மற்றும் பிராணவாயு உற்பத்தி கலன் மற்றும் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தை திறந்து வைக்கிறார்.


Tags : Chief Minister ,Mukheri ,Jamalia ,Chennai ,K. Stalin , Rainwater drainage works in Chennai, inspected by Chief Minister M.K.Stal.
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...