×

உலக யானைகள் தினத்தையொட்டி மெரினாவில் யானைகளை நிறுவி விழிப்புணர்வு; அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

சென்னை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உண்ணி களைச்செடிகளால் தயாரிக்கப்பட்ட  யானைகளை நிறுவி விழிப்புணர்வு நிழ்ச்சியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உள்ள யானைகளின் வாழ்விடங்களில் தமிழ்நாட்டின் வனப்பகுதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியத்தில் உள்ள யானைகள் பற்றிய குறிப்புகள் யானைகள், தமிழர் வாழ்வியலில் யானைகள் ஒரு அங்கமாக விளங்குகின்றன என்பதை தெரிவிக்கின்றன. யானைகள் பாதுகாப்பிவீன உறுதி செய்ய யானைகளின் வாழ்விட பாதுகாப்பிற்காக இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 4 யானைகள் காப்பகங்கள் உள்ளன. அதாவது, நீலகிரி யானைகள் காப்பகம், நிலம்பூர் யானைகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் யானைகள் காப்பகம், ஆனைமலை யானைகள் காப்பகம் ஆகும். 2017ம் ஆண்டு நடந்த யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் சுமார் 2,700 யானைகள் உள்ளன.

இந்நிலையில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரை, கண்ணகி சிலை அருகில் உண்ணிச் செடிகள் எனப்படும் அந்நியக் களைத் தாவரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட யானைகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் 5வது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கானுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையைப் பேணுவதில் யானைகள் மிக முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும்,’’என்றார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல், காலநிலை  மாற்றம் மற்றும் வனத்துறையின் செயலாளர் சுப்ரியா ஸாஹூ மற்றும் சையத்  முஜம்மில் அப்பாஸ், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத் துறை உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Marina ,World Elephant Day ,Minister ,Ramachandran , Awareness by installing elephants in Marina on World Elephant Day; Inaugurated by Minister Ramachandran
× RELATED சென்னையில் இதுவரை ₹5 கோடி மதிப்பிலான...