வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐ மீது தாக்குதல்; ஒருவர் கைது

தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் நேற்று முன்தினம் மாலை கிராஸ் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்ேபாது, ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்களை  மடக்கி விசாரணை செய்தபோது 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உதவி ஆய்வாளர் சரவணனை சரமரியாக தாக்கி விட்டு, தடுத்த சக காவலர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள்  என தெரியவந்தது. இதனையடுத்து,  லோகநாதனை கைது செய்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் மற்ற 2 பேரை தேடி வருகின்றனர். உதவி ஆய்வாளரை அடித்து கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: