×

மூளைச்சாவு அடைந்த கூலி தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்; 4 பேருக்கு பொருத்தப்பட்டன

சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த கூலி தொழிலாளியின் கல்லீரல், தோல், சிறுநீரகங்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டன. இதனால்  4 பேர் பயனடைந்தனர். கும்மிடிப்பூண்டி பெருவயல்  கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (59), கூலி தொழிலாளி. இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 9ம் தேதி உணவு வாங்குவதற்காக சேகர், பெருவயல் நெடுஞ்சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி காலை சேகருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சேகரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, இதுபற்றி டாக்டர்களிடம் தெரவித்தனர். அதன் பேரில்,  ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேகரின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், தோல் போன்ற உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டு, உயிருக்கு போராடி வந்த 4 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டன.

Tags : Organ donation of brain-dead laborer; Fits 4 people
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்