ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகள் விறுவிறு

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி 43வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வசந்தம் நகர் பிரதான சாலை சாலையோரம் இக்கால்வாய் அமைக்க ரூ.6 கோடி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. வடிகால்வாய் வரை ஒரு புறமும் 1000 மீட்டர் நீளம், 4.5 அடி உயரம், 4 அடி அகலம் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு பருவம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக ஸ்ரீராம் நகர் இருந்தன. இதை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக தீர்வுகாண  ஆவடி மாநகராட்சி 47வது வார்டு ஸ்ரீராம் நகர் சாலையோரம் இக்கால்வாய் அமைக்க ரூ.4.5 கோடி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. வடிகால்வாய் வரை ஒரு புறமும் 1500 மீட்டர் நீளம், 5.5 அடி உயரம், 5 அடி அகலம் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வடிகால்வாய், அயப்பாக்கம் ஏரிக்குச்செல்லும் இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மழை நீர் வடிகால்வாயுடன் இணைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரூ.4.8 கோடியில் ஆவடி மாநகராட்சி 14வது வார்டு சேக்காடு, அண்ணாநகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அண்ணாநகர் மெயின் ரோடு சாலையின் ஓரம் இக்கால்வாய் அமைக்க ரூ.4.8 கோடி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. வடிகால்வாய்வரை, ஒரு புறமும் 1200 மீட்டர் நீளம், 7.2 அடி உயரம், 6 அடி அகலம் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வடிகால்வாய், சேக்காடு ஏரியில் ஏரிக்கு மழை நீர் வடிகால்வாயில் இணைக்கப்படுகிறது. கட்டுமானப் பணியை முன்னிட்டு சாலையின் மூன்று இடங்களில், கால்வாய் ஓரத்தில் பாலம் அமைக்கும் பணி மூன்று மாத காலத்தில் முடிவடைய உள்ளது.

Related Stories: