காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை

பூந்தமல்லி: இந்தியாவின் விடுதலைப் போராட்ட தியாகிகளின் நினைவை போற்றும் விதமாகவும், நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கொண்டாடும் விதமாகவும் திருவள்ளூர் தெற்கு மாவட்டம், பூந்தமல்லி நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமை வகித்தார்.  முன்னதாக காங்கிரஸ் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கினர். பாதயாத்திரை பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து திருமழிசை வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றது.இதில்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: