திருமணமான 4 வருடத்தில் இளம்பெண் திடீர் சாவு; ஆர்டிஓ விசாரணை

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவலாங்காடு அரிச்சந்திராபுறம்  கிராமத்தில் வசிப்பவர் சரவணன் (25). இவரது மனைவி தீபா (22). இருவரும் கடந்த 4 வருடங்கள் முன்பு காதல்  திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீபாவிற்கு டிபி நோய் தாக்கியது. இதில் வயிற்றில் கட்டி போன்று உருவானது.  தீபா, உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் தீபா சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் வழக்கு பதிவு செய்தார். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால்  திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி ஆர்டிஓ உடல்நலக் குறைவால் தான் இருந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: