×

ஆகாஷ் பைஜூஸ் சார்பில் அனைவருக்கும் கல்வி திட்டம்

சென்னை: இந்திய அரசின் ஆசாதிகா அமிர்த் மஹோத்சவ் முயற்சியை கொண்டாடும் வகையில், தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் தேசிய அளவில் முதன்மையாக விளங்கும் ஆகாஷ் பைஜூஸ், உயர்கல்விக்கான தனியார் பயிற்சியில் மாணவிகளை சேர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு பெரிய உந்துதலை ஏற்பாடு செய்து வருகிறது. ‘

‘அனைவருக்கும் கல்வி’ என்ற திட்டமானது புறக்கணிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் கிட்டத்தட்ட 2,000 மாணவர்களுக்கு, குறிப்பாக மாணவிகளுக்கு இலவச நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மற்றும் உதவித்தொகைகளை வழங்குவதற்கான நாடு தழுவிய திட்டமாகும். ஆன்தே ஒரு மணி நேர தேர்வாகும் மற்றும் இது நவம்பர் 5-13, 2022 வரை நடைபெறும்.

இந்த வெளியீட்டு விழா இன்று இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் 45 இடங்களில் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வானது டெல்லியில் உள்ள ஏரோசிட்டியில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் ஹோட்டலில் நடந்தது. இதில் தலைவர்  ஜே.சி.சவுத்ரி, நிர்வாக இயக்குனர் ஆகாஷ் சவுத்ரி மற்றும் சிஇஓ  அபிஷேக் மகேஸ்வரி, ஆகாஷ் பைஜூ’ஸ் மற்றும் மற்ற நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஆன்தே மூலம் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஆகாஷ் பைஜூ’ஸ் இன் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர். கல்வியில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கு  கோப்பைகள் மற்றும் பூங்கொத்து வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
* மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், பொருளாதாரத்தில்  நலிவடைந்த குடும்பங்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை அல்லது ஒற்றை பெற்றோர்  (தாய்) உள்ள குடும்பங்களுக்கு பயனளிக்கும்.
* அடையாளம் காணப்பட்ட அனைத்து மாணவர்களும் நவம்பர் 5 முதல்  13, 2022 வரை நாடு முழுவதும் ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடைபெற  திட்டமிடப்பட்டுள்ள இன்ஸ்டிட்யூட்டின் முதன்மை ஸ்காலர்ஷிப் தேர்வான ஆகாஷ்  பைஜூவின் டெலண்ட் ஹண்ட் தேர்வு - 2022 (ஆன்தே 2022)ல் பங்குகொள்வார்கள்
*  ஆன்தே  2022, 13வது பதிப்பு, சிறந்த மாணவர்களுக்கு 100% உதவித்தொகை மற்றும் சிறந்த  செயல்திறன் கொண்டவர்களுக்கு ரொக்கப்பரிசுகளை வழங்கும்.
* உதவித்தொகை தவிர, 5 மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து நாசாவிற்கு செல்லும் இலவச பயண வாய்ப்பையும் வெல்வார்கள்.
* துவங்கப்பட்டதிலிருந்து, ஆன்தே 33 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கியுள்ளது.

Tags : Akash Byjus , Education program for all by Akash Byjus
× RELATED ஜேஇஇ முதன்மை தேர்வில் ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் சாதனை