×

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் பல்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் குமரகுருநாதன் கமிஷனர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கால்நடைத்துறை மின்சாரம், அரசு போக்குவரத்து கழகம், வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை, காவல் ஆய்வாளர், போக்குவரத்து காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசிக்கப்பட்டது. காஞ்சிபுரம் நகரில் அதிகளவில் நாய் தொல்லைகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதால் அதனை பிடித்து கருத்தடை செய்தல், மாநகராட்சி பகுதியில் உள்ள 14 கோயில் குளங்களை மழை நீர் சேமிப்பு குளங்களாக மாற்ற ஆலோசிக்கப்பட்டது.

அரசு தலைமை மருத்துவமனை முன்பு  உள்ள அனைத்து ஆக்கிரமித்து அகற்றுதல், நகரில் மினிபஸ் இயக்குதல், ஆட்டோ ஓட்டுனர் இணைந்து ஆட்டோ சுற்றுலா திட்டம் செயல்படுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Kanchipuram Corporation , Coordination meeting of multi-departmental officers in Kanchipuram Corporation
× RELATED கவுன்சிலர்கள் புறக்கணித்ததால்...