திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி ெபற்றவர்கள் விவரம்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான திமுக ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி ெபற்றவர்கள் பெயர் விவரங்களை கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் பதினைந்தாவது பொது தேர்தலை முன்னிட்டு ஒன்றியங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் அவைத் தலைவர், செயலாளர், துணை செயலாளர் (பொது), துணை செயலாளர் (ஆதிதிராவிடர்), துணை செயலாளர் (மகளிர்), பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கான ஒன்றிய தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல வேலூர் கிழக்கு, வேலூர் மத்திய, ேவலூர் ேமற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் தெற்கு, சேலம் மத்திய, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, விருதுநகர் தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பெயர்களை திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.

Related Stories: