மாற்றுத்திறனாளிகள் முகாம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறப்பு மனுநீதிநாள் முகாமில்  மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட கலெக்டர்  ஆ.ர.ராகுல்நாத்  நேரில் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாவட்ட கலெக்டர்  ஆ.ர.ராகுல்நாத்  தலைமையில் நேற்று நடைபெற்ற முகாமில் தேசிய அறக்கட்டளை மூலம் பாதுகாவலர் நியமன  சான்றுகளை மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களிடம்  வழங்கினார். உடன்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பொறுப்பு லட்சுமணன் ஆகியோர்  உடனிருந்தனர்.

Related Stories: