மணலி சிபிசிஎல் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள வாயு கசிவை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி வலியுறுத்தல்

சென்னை: சிபிசிஎல் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கசியும் வாயுவை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங்க புரிக்கு திமுக எம்பி கனிமொழி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. தமிழகஅரசின் நிபுணர் குழு ஆய்வில், சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திலிருந்துதான் இந்த வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த வாயும் ஹைட்ரஜன் சல்பைடு என சந்தேகிக்கப்படுகிறது. ஹைட்ரஜன் சல்பைடு குழந்தைகளின் மூளையை பாதிப்பதுடன் மேலும் சில கடுமையான உடல்நல கோளாறுகளை உறுவாக்கக்கூடியது என்று தெரியவந்துள்ளது.  

வாயு கசிவு திருவொற்றியூர் மற்றும் மணலி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி டி.கே.எஸ் நகர், காமதேவன் நகர் பகுதியில் வசிப்பவர்கள் வாயு கசிவால் பீதி அடைந்துள்ளனர். பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று உடனடியாக வாயு கசிவை நிறுத்துமாறு நடவடிக்கை எடுக்கவும் அதுவரை உற்பத்தியை நிறுத்துமாறும் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: