திருப்போரூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்வு

திருப்போரூர்:  திருப்போரூர் ஒன்றிய திமுக நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, திருப்போரூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவராக எஸ்.எம்.ஏகாம்பரம், ஒன்றிய செயலாளராக எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், ஒன்றிய நிர்வாகிகளாக ரமேஷ், ஜெயபால், மகாலட்சுமி ராஜாராம், ராமகிருஷ்ணன், கருணாகரன், மயில்வாகனன், கெஜராஜன் ஆகியோரும், தெற்கு ஒன்றிய அவைத்தலைவராக திருமலை, ஒன்றிய செயலாளராக பையனூர் சேகர், ஒன்றிய நிர்வாகிகளாக கெஜபதி, பொன்னுரங்கம், கல்யாணி, சண்முகம், ஜெயச்சந்திரன், சுப்ரமணி, மதுரைவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று வடக்கு ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பையனூர் சேகர் ஆகியோர் மற்ற நிர்வாகிகளுடன் சென்று காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

Related Stories: