ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து, ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து ரயிலில் சோதனை மேற்கொண்ட ரயில்வே போலீசார் அதில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ எடையுள்ள 25 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திராவிடம் அரிசி மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: