பொன்னேரி நகராட்சி அலுவலக வளாகத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் கூட்ட அரங்க கட்டிடம்; டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

பொன்னேரி: பொன்னேரி நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் புதியதாக கார்  பார்க்கிங் வசதியுடன் கூடிய கூட்ட அரங்க கட்டிடம் கட்டுவதற்காக  டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய கூட்ட அரங்க கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில் திட்ட பணியை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார்.

இதில் நகராட்சி மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் வழக்கறிஞர் ரவிக்குமார், சுகுமாரன், கதிரவன், செங்கல்வராயன், ராமலிங்கம், நல்லசிவம், யாக்கோபு, உமாபதி, பத்மாசம்பத், பழவை முகம்மது அலவி, மா.தீபன், அண்ணாமலைசேரி ஆறுமுகம், ஏசுராஜன், பழனி, கருணாகரன், சி,எம்.ரமேஷ், நிர்மலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: