×

சல்மான் ருஷ்டி மீது தாக்குதல், கத்திக்குத்து

நியூயார்க்: சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் தாக்கப்பட்டார். இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி. கடந்த 1980ம் ஆண்டில் எழுதிய ‘சாத்தானின் கவிதைகள்’ என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருடைய தலைக்கு ஈரான் மதத் தலைவர்கள் பரிசும் அறிவித்தனர். இதனால், அவருடைய உயிருக்கு அச்சறுத்தல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவில் குடியேறினார்.

20 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார். இந்நிலையில், நியூயார்க்கில் நேற்று நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசுவதற்கு எழுந்தபோது, பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர் திடீரென பாய்ந்து அவரை தாக்கினார். அவரை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், கீழே விழுந்த அவர் மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Salman Rushdie , Attack on Salman Rushdie, stabbing
× RELATED மிதுன ராசியினரின் பொதுப் பண்புகள்