நெல்லை மாவட்டத்தில் குவாரிகள் செயல்பட ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: நெல்லை மாவட்டத்தில் குவாரி ஒன்றில் கடந்த மே மாதம்  நடந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள எல்லா குவாரிகளையும் மூட அரசு உத்தரவிட்டது.விதிகளை மீறி செயல்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘அபராதம் விதித்ததை எதிர்த்து குவாரிகள் அரசிடம் முறையிடலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குவாரிகள் செயல்படலாம் என்று உத்தரவிட்டார்.

Related Stories: