என்ஜினில் புகை கோவையில் தரையிறங்கிய மாலத்தீவு விமானம்

பீளமேடு: பெங்களூருவிலிருந்து மாலத்தீவுக்கு 92 பயணிகளுடன் நேற்று காலை கோ ஏர் நிறுவன விமானம் புறப்பட்டது. நடுவானில் என்ஜினில் இருந்து புகை வருவதாக விமானிக்கு கணினி தகவல் தந்தது. இதையடுத்துஅந்த விமானம் அவசரமாக கோவையில் தரையிறங்கியது. சோதனையில் விமான இன்ஜினில் புகை எதுவும் வரவில்லை என்பது தெரியவந்தது. வேறு விமானத்தில் பயணிகள் மாலத்தீவு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: