முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் யானைகளை பாதுகாக்க வேண்டும்

சென்னை: உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: உலக யானைகள் நாளில், தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை அறிவிக்கப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. கானுயிர்ச் சூழலமைப்புகளின் சமநிலையை பேணுவதில் யானைகள் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. இயற்கையின் கொடையான இந்த மிடுக்குமிகு பாலூட்டிகளை எவ்விலை கொடுத்தேனும் நாம் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: