இலங்கை கடற்படை கைது செய்துள்ள 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், 10ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது இலங்கையில் உள்ள திரிகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: