ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சோதனை செய்ய குழுக்கள் அமைப்பு: போக்குவரத்து இணை ஆணையர் பேட்டி

சென்னை: ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சோதனை செய்ய 5 பகுதியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் போக்குவரத்து இணை ஆணையர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். மதுரவாயல் பாலம், பெருங்களத்தூரில் ஆம்னி பேருந்து கூடுதல் கட்டண வசூலை சோதனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறையை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் பேருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: