×

சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களை தேசிய கோடி ஏற்ற விடாமல் தடுக்கக்கூடாது: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். சில கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சனைகள் இருப்பதாக தகவல் பெறப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சாதிய பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்றுவதில் பல சிக்கல்கள் இருப்பதாக அரசுக்கு தகவல் வந்தது. இந்தனை தொடர்ந்து தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்: சுதந்திர தினத்தன்று தலைமை செயலகம் முதல் கிராம ஊராட்சி வரை அனைத்து தலைமை அலுவலகம் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசிய கொடி ஏற்றிவைப்பது மரபு. ஒரு சில கிராமங்களில் சாதிய பாகுபாடு காரணமாக தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சனைகளோ, தேசிய கோடியை ஏற்றுபவரையோ அல்லது அதனை ஏற்றுபவர்களை அவமதிக்கும் செயலோ  நடைபெறலாம் என தகவல்கள் வந்துள்ளது.

எனவே இந்திய அரசியலமைப்பு சட்டம் சட்டத்தின் படி தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். மேலும் அது எந்த வடிவத்தில் செயல்பட்டாலும் அதனை தடை செய்யவேண்டும். தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 1989-ம் ஆண்டு சட்டத்தின் படி பட்டியலினத்தவர், பழங்குடியினர் அல்லாத எவரும் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தவர், பழங்குடியினத்தை சேர்ந்த நகராட்சி, ஊராட்சி தலைவர், உறுப்பினர் அலுவலக பணியில் இருக்க கூடிய எவரையும் அவர்களதுஅலுவலக பணிகளையும், கடமைகளையும் செய்யவிடாமல் தடுப்பது அல்லது அச்சுறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதனை கருத்தில் கொண்டு வரும் 75-வது சுதந்திரத்தின விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு அனைத்து கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்யவேண்டும்.

இதனை தொடர்ந்து சுதந்திரத்தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொள்வதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்யவேண்டும்.

இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் போதுமான காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளை கையாளுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை அல்லது அலுவலர்களை  அறிவிக்கலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Chief Secretary ,National ,Independence Day , Independence Day, Chief Secretary's Letter to Panchayat Council Chairman, National Code, District Collectors
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...