காஷ்மீரில் பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி சுட்டுக் கொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள அஜாஸின் சதுனாரா பகுதியில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளி முகமது அம்ரேஜ் என்பவரை நேற்றிரவு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில்:

பீகார் மாநிலம் மாதேபுராவை முகமது அம்ரேஜ் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி பந்திபோராவில் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்’ என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் என்கவுன்டரை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தில் பாதுகாப்பு படையின் தரப்பில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: