சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: தலைமைச் செயலாளர் உத்தரவு...

சென்னை: சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். சில கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடி ஏற்றுவதில் பிரச்சனைகள் இருப்பதாக தகவல் பெறப்பட்டுள்ளது. தீண்டாமையை எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Related Stories: