ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தாயார் சென்ற கார் டயர்கள் வெடித்து விபத்து; காயமின்றி உயிர் தப்பினார்..!!

ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகனின் தாயார் விஜயம்மா பயணம் செய்த காரின் 2 சக்கரங்களும் ஒரே நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் எந்தவித காயமுமின்றி அவர் உயிர் தப்பினார். விஜயம்மா என்று ஆந்திர மக்களால் அழைக்கப்பட கூடிய ஜெகன் மோகனின் தாயார் விஜயலட்சுமி, நேற்று தனது கணவரின் நண்பரான ஐபாபு ரெட்டியின் குடும்பத்தினரை பார்க்க காரில் கர்னூல் சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஐதராபாத்துக்கு திரும்பி செல்லும் போது புத்தி பெட்ரோல் நிலையம் அருகே திடீரென அவரது காரின் 2 டயர்களும் வெடித்தன.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழும் நிலை ஏற்பட்டது. ஆனால் ஓட்டுநர் சாமர்த்தியமாக இயக்கி காரை கவிழாமல் ஓரமாக நிறுத்தியுள்ளார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் அங்கிருந்து மற்றொரு காரில் விஜயம்மா ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அண்மையில் விஜயம்மா தனது மகனின் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து தெலுங்கானாவில் கட்சி தொடங்கியுள்ள தனது மகள் ஷர்மிளாவின் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: