×

சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தஞ்சம்..!

பாங்காக்: சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள்  கடுமையான போராட்டங்களை நடத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் அதிபரின்  அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதனால்  வேறுவழியின்றி மாலத்தீவு வழியாக கடந்த ஜூலை 14ம் தேதி முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு ஓட்டம்பிடித்தார். சிங்கப்பூரில் இருந்து தாயலாந்துக்குச் செல்ல விரும்பி அந்நாட்டின் அனுமதி கோரியிருந்தார்.

உயர் பதவி வசிப்போருக்கான தூதரக பாஸ்போர்ட் உள்ளதால் 90 நாட்கள் வரை தாய்லாந்தில் கோத்தபய தங்கலாம் என தாயலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். சிங்கப்பூரில் இருந்து தனி விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சேவும் அவரது மனைவியும் தாயலாந்து சென்றடைந்தனர். அரசியல் தஞ்சம் அளிக்குமாறு கோத்தபயவிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags : President ,Kotabaya Rajapakse ,Singapore ,Thailand , Former Sri Lankan President Gotabaya Rajapakse, who left Singapore, took refuge in Thailand..!
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...