மின் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மதுராந்தகம் வட்டக்குழு சார்பாக மதுராந்தகம் மின்வாரிய அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது இதில், கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். சிஐடியு கௌரவ தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாகிகள் நடராஜ், துளசி, சங்கர், ஜீவானந்தம், கோபாலகிருஷ்ணன், பொன்னுசாமி, தயாளன், ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதேபோன்று, எல்.எண்டத்தூர், புக்கத்துறை, கருங்குழி பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பாகவும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்திற்கு கட்டணத்தை குறைக்கவும், அரசு தரப்பில் மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும், பாழாகும் மின் கசிவை கட்டுப்படுத்திடவும் நீண்ட கால திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Related Stories: