திருவள்ளூர் அருகே துணிகரம் ஐகோர்ட்டில் பணியாற்றும் ஊழியரிடம் செயின் பறிப்பு

திருவள்ளூர்: சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றிவரும் பெண் ஊழியரிடம் செயின் பறித்து தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றுபவர் உமாதேவி(49). இவரது கணவர் கோவிந்தராஜூ. இவர்கள் மகள் அமிர்தாவுடன் நேற்றுமுன்தினம் திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து ஊர் திரும்பினர். திருவள்ளூர் மீரா தியேட்டர் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு சென்றனர்.

பின்னர் அவர்கள் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு நடந்துவந்தபோது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற பைக்கில் வந்த 2 பேர் திடீரென உமாதேவியை மறித்து அவர் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்தனர். ஆனால் செயினை விடாமல் பிடித்துக்கொண்டு உமாதேவி கூச்சலிட்டதால் கையில் கிடைத்த இரண்டரை சவரன் பாதி செயினுடன் மர்ம நபர்கள் தப்பினர். புகாரின்படி, திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: