கால்நடை கடத்தல் வழக்கு திரிணாமுல் மூத்த தலைவர் கைது: மேற்கு வங்கத்தில் சிபிஐ நடவடிக்கை

பிர்பும்: மேற்கு வங்கத்தில் கால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மண்டலை சிபிஐ கைது செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில். திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த அமைச்சர் பார்தா சட்டர்ஜி சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருடைய பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில், கால்நடை கடத்தல் வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முதல்வர் மம்தாவுக்கு மிக நெருங்கியவருமான அனுப்ரதா மண்டலுக்கு தொடர்பு இருப்பது சிபிஐ.க்கு தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த திங்கள், புதன்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அளித்தும், அவர் உடல்நலக் குறைவை காரணம் காட்டி ஆஜராகாமல் தவிர்த்தார் இந்நிலையில், பிர்பும் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று மத்திய போலீஸ் படையினருடன் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: