பிஞ்சில் பழுத்த 9ம் வகுப்பு மாணவன் போதைக்கு அடிமையாக்கி 20 மாணவிகள் பலாத்காரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருளை பயன்படுத்தும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மாணவிகளும் இதில் அடங்குவர். இந்நிலையில், கண்ணூரில் உள்ள பிரபல தனியார் பள்ளி மாணவிகளை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை 14 வயது மட்டுமே ஆன சக மாணவன் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது: வெளிமாநிலத்தில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவி, 8 மாதங்களுக்கு முன் கண்ணூர் பள்ளியில் சேர்ந்துள்ளார். அவருடன் நெருங்கி பழகிய சக மாணவன், மாணவிக்கு ஏதோ சோகம் இருப்பதை கண்டு, போதை பொருளை பயன்படுத்தினால் உற்சாகமாக இருக்கலாம் என கூறியுள்ளான். இதை கேட்டு மாணவியும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கினார். நாளடைவில் போதைக்கு அடிமையானார். அதை சாதகமாக பயன்படுத்திய மாணவன்,  மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தான். அதை தனது செல்போனிலும் பதிவு  செய்தான்.

இந்நிலையில், மாணவியின் பெற்றோருக்கு இது பற்றி தற்செயலாக தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.  போதைப்பொருள் மீட்பு மையத்தில் மாணவிக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், மாணவன் மீது போலீசில் புகார் செய்தனர். இந்த விசாரணையில்தான் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 14 வயதான அந்த மாணவன் இதேபோல் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்து வந்துள்ளான். போலீசார் அவனை போக்சோ பிரிவில் கைது செய்து, சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் அவனை டிஸ்மிஸ் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: