சிங்கங்களுடன் மோதும் நாய்: நிதிஷ் குமார் மீது மறைமுக தாக்குதல்

புதுடெல்லி: பீகாரில் பாஜ.வுடனான கூட்டணியை முறித்து கொண்டு, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் புதிய ஆட்சியை நிதிஷ் அமைத்துள்ளார். இதன்மூலம், தனது கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றும் பாஜ.வின் ஆபரேஷன் தாமரை திட்டத்தை நிதிஷ் முறியடித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பாராட்டி வருகின்றன. இது பற்றி நிதிஷ் கூறுகையில், ‘பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. ஆனால், 2024ம் ஆண்டு தேர்தலை பற்றி பாஜ நிச்சயமாக கவலைப்பட வேண்டும்,’ என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு நாய் 2 சிங்கங்களுடன் சண்டையிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு, அதற்கு ‘சவால் 2024’ என்று தலைப்பு வைத்தார். இது கடும் சர்ச்சையான நிலையில், சிறிது நேரத்தில் அதை நீக்கி விட்டார்.

Related Stories: