×

இலங்கை, பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் வலையில் சிக்கியது நேபாளம்: ரூ.1,500 கோடி கடன் உதவி

காத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்துக்கு ரூ.1,500 கோடி கடன் உதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்கு பயணம் சென்றுள்ள நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் கட்கா, குயிங்டோ நகரில் சீன வெளியுறவு அமைச்சரும், நிதியமைச்சருமான வாங்யியை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், கட்காவுடன் இணைந்து வாங் யி கூட்டாக அளித்த பேட்டியில், ‘நேபாள அரசின் பல்வேறு திட்டங்களுக்காக சீனா ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. மேலும், பேரிடர் மேலாண்மைக்கு ரூ.5.62 கோடி, மருந்துகள் வாங்க ரூ.22.51 கோடி வழங்கப்பட உள்ளது,’ என்று தெரிவித்தார். இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றுக்கு ஏற்கனவே பட்டுப்பாதை திட்டம் என்ற பெயரில் அதிகளவில் கடன் அளித்து அடிமையாக்கி வைத்திருக்கும் சீனாவின் வலையில், இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் தற்போது சிக்கி உள்ளது.

Tags : Sri Lanka ,Pakistan ,China ,Nepal , Following Sri Lanka, Pakistan in China's trap, Nepal: Rs 1,500 crore loan assistance
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்