கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்களை கொளுத்தியவர் கைது

சென்னை: கள்ளக்குறிச்சி, கனியாமூர் சக்தி பள்ளியில் இருந்த  மாணவர்களின் சான்று ஆவணங்களை தீ வைத்து கொளுத்திய நபரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கனியாமூர் சக்தி மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று வழக்கினை புலனாய்வு செய்யும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கலவரத்தின்போது சக்தி பள்ளி அலுவலகத்தில் இருந்த மாணவர்களின் சான்று ஆவணங்களை தீ வைத்து கொளுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தாலுகா, மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த லட்சாதிபதி (34) என்பவரை சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் காணப்பட்டு தனிப்படை போலீசாரால் தேடி வந்த நிலையில் திருப்பூரில் வைத்து நேற்று கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Related Stories: