போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டும்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒழிக்க வேண்டும்.

போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை இல்லாத பாதையில் இன்றைய இளைஞர்களை வழிநடத்தி செல்ல வேண்டியது தமிழக அரசின் கடமை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: