×

பெண் என்பதால் சிக்க வைத்தார்கள்: போதை பொருள் வழக்கு பற்றி ராகினி

சென்னை: பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி. தமிழில் அறியான், நிமிர்ந்து நில் படங்களில் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் போதை பொருள் புழக்கம் தொடர்பாக நடந்த அதிரடி சோதனையில் சிக்கிய இவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 3 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் கைது செய்யப்பட்டது பற்றி முதன் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் உள்ள விஜயபுராவில் திருநங்கைகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அவர் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: நம் சமூகத்தில் பெண்களை குறிவைத்து எளிதில் வீழ்த்த முடியும். அதன்படிதான் என்னையும் குறிவைத்து தாக்கினார்கள். அதுவும் நான் ஒரு வெற்றிகரமான பெண்ணாக இருந்ததால் தாக்குதல் அதிகமாக இருந்தது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி தெரியாதவர்கள், எனக்கு அறிமுகமில்லாதவர்கள் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி என்னை குறிவைத்தார்கள். போதை வழக்கில் சிலர் சிக்க வைத்தனர். அவர்கள் யாரென்றே எனக்கு தெரியாததால் நான் அவர்களை பற்றி கவலைப்படவில்லை. நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று என் ரசிகர்கள் விரும்புகிறார்கள். எனது வாழ்க்கையின் மோசமான கட்டத்தை மறக்கச் செய்யும் நல்ல ரசிகர்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்களின் அன்பு எனக்கு தொடர்ந்து உத்வேகம் தரும் என்றார்….

The post பெண் என்பதால் சிக்க வைத்தார்கள்: போதை பொருள் வழக்கு பற்றி ராகினி appeared first on Dinakaran.

Tags : Ragini ,Chennai ,Ragini Dwivedi ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...