×

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு; வேலுமணி மீது கடும் நடவடிக்கை கூடாது என்ற கோரிக்கை நிராகரிப்பு: தொடர்ந்து விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது, வழக்குகளை ரத்து செய்யக் கோரி குற்றவியல் பிரிவில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வேலுமணி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அப்போது வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வேலுமணிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை  எடுக்க கூடாது என்று கோரிக்கை வைத்தார். இதற்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆட்சேபம் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை தொடர்ந்து நடைபெறலாம். கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட முடியாது. வழக்கின் விசாரணைக்கும் தடை விதிக்க முடியாது. அதேநேரத்தில், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டனர்.

Tags : Velumani , Corporation tender malpractice case; Rejection of request not to take strict action against Velumani: Court orders further investigation
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...