போதை தீமை குறித்து முதல்வர் பேசியது பெருமையாக உள்ளது: அண்ணாமலை அறிக்கை

சென்னை: ‘போதையின் பாதையிலிருந்து தமிழகத்தை முற்றிலுமாக மீட்க வேண்டும்’ என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ெவளியிட்ட அறிக்கை: போதை பொருள் ஒழிப்பு குறித்து இதுபோன்ற ஒரு விழிப்புணர்வுடன் கூடிய ஒரு விளக்கத்தை தான் நான் தமிழக முதல்வரிடமிருந்து எதிர்பார்த்தேன்.  

போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் இத்தனை விரிவாக இத்தனை தெளிவாக நம் மாநிலத்தின் முதல்வர் அறிந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: