நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொச்சி-தனுஷ்கோடி சாலையில் போக்குவரத்திற்கு அனுமதி

மூணாறு: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளா மாநிலம் மூணாறில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கொச்சி-தனுஷ்கோடி, மூணாறு-உடுமலை சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடைபட்டது.

கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் சாலையில் ஏற்பட்ட மண்சரிவால், அவ்வழியே போக்குவரத்துக்கு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் மூணாறில் இருந்து தமிழ்நாடு செல்லும் வாகனங்கள் ஆனைச்சால் ராஜாக்காடு வழியாக திருப்பி விடப்பட்டது. அதேபோல், மூணாறிலிருந்து மறையூர் செல்லும் சாலையில் எட்டாம் மைலுக்கு அருகில் சாலையின் ஒருபகுதி முழுமையாக சேதமடைந்தது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தனுஷ்கோடி மூணாறு சாலையில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அந்த சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

Related Stories: