ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் வேண்டுகோள்: இரவு பகலாக தேசியக்கொடி தயாரிப்பு பணியில் மகளிர் சுய உதவிகுழு

புதுக்கோட்டை: சுதந்திர தின விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசியக்கொடி தயாரிப்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைவரது இல்லங்களிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட தேசியக் கொடி விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால்  புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2000 தேசியக்கொடிகள் தயாரித்து வந்த நிலையில் இந்த ஆண்டு 5 லட்சம் கொடிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துருப்பதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மறைமலைநகரில் மட்டும் 42 சுய உதவிக்குழு பெண்கள் 2 லட்சம் கொடியை தைக்க வேண்டும் என்று இலக்கோடு சில தினங்களாக இடைவிடாமல் தேசியக் கொடியை தைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கந்தர்வகோட்டை,குன்றாண்டார்கோவில், தேனி அமராவதி, திருவரங்கம் போன்ற அனைத்து ஒன்றியங்களிலும் தேசியக் கொடி தைக்கும் பணி சுறுசுறுப்பு அடைந்துள்ளது. இதனால் கொரோனாவால் முடங்கியிருந்த தையல் தொழில் மீண்டும் மெருகேறி இருப்பதால் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் அணைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: