வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி.20: 13 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

கிங்ஸ்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி கிங்ஸ்டனில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 47 (33 பந்து 4 பவுண்டரி, 2 சிக்சர்), டெவோன் கான்வே 43 (29 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜேம்ஸ் நீஷம் நாட்அவுட்டாக 33 (15 பந்து) பிலிப்ஸ் 17, கப்டில் 16 ரன் அடித்தனர். வெ.இண்டீஸ் பந்துவீச்சில் ஒடியன் ஸ்மித் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஷமர் ப்ரூக்ஸ் 42 (43பந்து), கேப்டன் பூரன் 15, ஜேசன் ஹோல்டர் 25, ரோவ்மேன் பவல் 18 ரன் அடித்தனர்.

20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் 13 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. ஓடியன் ஸ்மித் 27 (12பந்து), ரொமாரியோ ஷெப்பர்ட் 31 (16பந்து) ரன்னில் நாட்அவுட்டாக களத்தில் இருந்தனர். நியூசிலாந்து பந்து வீச்சில் மிட்செட்சான்ட்னர் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது டி.20 போட்டி நாளை மறுநாள் இதே மைதானத்தில் நடக்கிறது.

Related Stories: