நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி

காத்மண்டு: உலக நாடுகளில் கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, கொரோனா வைரசின் 4வது அலையில் நேபாள நாடு சிக்கி தவித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் 1,090 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் உயிரிழந்தனர். 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் பற்றிய விவரம் தெரிய வரவில்லை.

இதுபற்றி காத்மண்டு போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ‘4வது அலையை சுகாதார அதிகாரிகள் எதிர்கொண்டு வரும் சூழலில், கடந்த 2 மாதங்களில் எச்1, என்1 வகை வைரசால் ஏற்பட கூடிய பன்றி காய்ச்சல் பாதிப்புகளும் காணப்படுகின்றன. இதுவரை 57 பேருக்கு தொற்றுகள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நிபுணர்கள், இந்த தருணங்களில் தவறான சிகிச்சை மற்றும் அலட்சிய போக்கு அதிகரித்து, காலதாமத சிகிச்சைக்கு வழிவகுத்து மரணங்கள் கூட ஏற்பட கூடும் என எச்சரித்துள்ளனர். இதனால், அந்நாட்டில் 2 வகை

பெருந்தொற்றுகள் ஏற்பட கூடும் என பல்வேறு பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: