ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது 3 வீரர்கள் வீரமரணம்: வீரமரணம் அடைந்தவர்களில் தமிழரும் ஒருவர்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ராஜேரி பகுதியில் ராணூவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதலின் போது உயிரிழந்தவர்களில் தமிழக வீரரும் ஒருவர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை படை தாக்குதலை முறியடிக்கும் போது தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உட்பட 3 வீரர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரின் ராஜேரி பகுதியில் இந்திய வீரர்கள் முகாமில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த தாக்குதலை சமாளிப்பதற்காக இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்திருகின்றனர். இந்த பதில் தாக்குதலின் மூலமாக 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் போது இந்திய வீரர்கள் 6 பேருக்கு காயம் அடைந்திருகின்றது. தாக்குதலின் போது 3 வீரர்கள் வீரமரணம் அடைந்திருக்கின்றனர்.  குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மணன் என்பவரும் ஒருவராக இருக்கிறார்.தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த புதுப்பட்டி கிராமம் பகுதியில் இருக்கக்கூடிய லக்ஷ்மணன் என்பவர் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்திருக்கிறார்.

அவருடன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் என்பவரும் மற்றும் ஹரியான பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமாரும் உயிரிழந்திருகின்றனர். இந்த 3 வீரர்களும் உயிரிழந்திருக்கக் கூடிய நிலையில் அந்த 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு படை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த தாக்குதலின் போது உயிரிழந்திருக்கக் கூடிய மதுரை மாவட்ட வீரரின் உடலானது தமிழகம் திரும்புவது குறித்து உள்ளிட்ட விவரங்களை பின்னர் அறிவிக்க இருப்பதாகவும் ராணுவத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: