×

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆக 12, 13ல் வட மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகம், தென் மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும். கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும். கேரளா, லட்சத்தீவு தென் கிழக்கு அரபிக்கடல், ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. நாளை ஆந்திரா, கர்நாடகா கடலோரம், மத்திய மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி வீசும். 40 -60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்றும், நாளையும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Tags : Nilagiri ,Govai ,Meteorological Inspection Centre , Nilgiris and Coimbatore districts likely to receive heavy rain today: Meteorological Department Information
× RELATED நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ...