×

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி முன்கூட்டியே காலாவதியானது ஏன்? ஈபிஎஸ் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி

சென்னை: அதிமுக பொதுக்குழுக்கு எதிராக பன்னீர்செல்வம் வைரமுத்து தொடர்ந்த வழக்கு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றதில் நடைபெற்று வருகிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இரண்டாவது நாளாக இந்த விசாரணை நடைபெற்று வரக்கூடிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருடைய வாதமானது 10.30 மணியளவில் தொடங்கியது. தொடர்ச்சியாக அந்த விவாதம் நடைப்பெற்று கொண்டிருகின்றன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதத்தை முன் வைத்துகொண்டிருக்கிறார்.

பொதுக்குழுவை பொறுத்த வரை அதிமுகவின் உடைய சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டதாகவும் ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொதுக்குழு உறுப்பினரிடையே கோரிக்கையை ஏற்று ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டதாகவும்  இது சம்பந்தமான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்கப்பட்டதற்கான விளக்கத்தை அளித்து கொண்டிருக்கிறார்கள். மேலும் 18 நாட்களுக்கு முன் ஜூன் 23-ம் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருப்பதையும், அழைப்பிதழ் வழங்கப் பட்டிருப்பதையும் சுட்டிகாட்டி ஈபிஎஸ் தரப்பில் வாதத்தை முன்வைத்து கொண்டிருகிறார்கள்.

மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழகம் நிர்வாகிகள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக ஈபிஎஸ் தரப்பு வாதத்தை முன் வைத்தன. இதை தொடர்ந்து வாதமானது தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டிருந்தது. இந்த வாதத்தில் கடந்த 23-ம் தேதி வரைவு தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் 22-ம் தேதி ஓபிஎஸ் ஒப்புதல் அளித்தார் எனவும் ஈபிஎஸ் தரப்பானது  விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். மேலும் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு தீர்மானம் எனக்கூறி பன்னீர் செல்வம் தரப்பில் தனி நீதிபதி ஒன்றும் இரு நீதிபதி அமர்வுகளும் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வரைவு தீர்மானம் தான் அது பொது நியமனம் அல்ல எனவும் ஈபிஎஸ் தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைபாளர் பதவி காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்னரே எப்படி இந்த பதவிகள் காலாவதியானது என ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேல்வி எழுப்பியிருக்கிறார். அப்பொழுது பதிலளிக்கும் போது ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவில் பங்கேற்ற பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் படிதான் ஜூலை 11-தேதி பொதுக்குழு கூட்டப்பட்டாதாக ஈபிஎஸ் தரப்பானது நீதிபதி கேள்விக்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்கள். மேலும் 2021 ல் டிசம்பரில் ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைபாளர் தேர்தல் நடைமுறைகளுக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் பதவிகள் காலாவதியாகி விடுகின்றன.

 மேலும் அதற்கு பதிலாக தான் 2017 -ம் தீர்மானத்தை எடுத்து கொள்ள முடியாது, இரட்டை தலைமை தேவையில்லை ஒற்றைத்தலைமை தான் தேவை என்பது ஜூன் 23-ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழுவின் போது உறுப்பினர்களுடைய விருப்பமானது இருந்ததாகவும்  ஈபிஎஸ் தரப்பு நீதிபது முன்பாக இந்த விளக்கத்தை அளித்துகொண்டிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் நீதிமன்ற உத்தரவு காரணமாக அதை நிறைவேற்ற முடியவில்லை என்ற தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைபாளர் இணைந்து தான் செயல்பட வேண்டும் இருவருடைய பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழகம் நிர்வாகிகள் கட்சி விவகாரங்களை கவனிப்பார் என தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்திருப்பதாகவும் ஈபிஎஸ் தரப்பு தெரிவித்திருக்கிறது.

ஒருங்கிணைபாளர்,இணை ஒருங்கிணைபாளர் பதவிகள் போல் அல்லாமல் பொதுக்குழு உறுப்பினர்களுடைய பதவிகள் காலாவதியாகவில்லை எனவும் அவற்றின் பதவிகள் கட்சிகளின் விதிப்படிதான் நடத்தப்பட்டது பொதுக்குழு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தரப்பும் ஈபிஎஸ் தரப்பும் முன் வைக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு அடுத்து அனைத்து நாட்களிலும் தலைப்பு செய்திகளாக வந்ததாகவும் விளக்கமளித்திருக்கிறார். ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை எனக்கூற முடியாது என்றும் ஜூன் 23-ம் தேதி கூட்டத்திலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு நோட்டீஸ் தபால் மூலம் தெரிவிக்க அவசியமில்லை எனவும் ஈபிஎஸ் தரப்பானது தெரிவித்திருக்கிறது.

கூட்டம் நடப்பது குறித்து தகவல் தெரிவிக்கவேண்டும் என்பதுதான் நோட்டீஸ் மிக மிக்கியமான தரப்பு என்றும் 2432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக ஈபிஎஸ் தரப்பு தனது வாதத்தை முன் வைத்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியானது வாதமானது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஈபிஎஸ் தரப்பு பொதுக்குழு கூட்டியது. ஒற்றைத்தலைமை மற்றும் நிர்வாகிகள் கருத்துகளை தெரிவிக்க நீண்ட விளக்கத்தை ஈபிஎஸ் தரப்பு நீதிபதி முன்பாக வைத்து கொண்டிருக்கின்றன.


Tags : EPS , Why did the post of coordinators expire early? The judge raised series of questions to the EPS side
× RELATED சொல்லிட்டாங்க…