×

பாஜ.வுக்கு டாடா காட்டியவர் முகுல் ராய்க்கு வழங்கிய இசட் பாதுகாப்பு வாபஸ்

புதுடெல்லி: பாஜ.வில் இருந்து மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவிய முகுல் ராய்க்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த முகுல் ராய், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ல் பாஜ.வில் இணைந்தார். அங்கு அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் பாஜவில் அவருக்கு மரியாதை தரப்படவில்லை. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ தோல்வி அடைந்த நிலையில், முகுல் ராய் மீண்டும் திரிணாமுலில் இணைந்தார். இந்நிலையில், தனக்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிரிவு பாதுகாப்பை திரும்ப பெற்று கொள்ளும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முகுல் ராய்க்கு மத்திய அரசின் சிபிஆர்எப். வீரர்களால் வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது….

The post பாஜ.வுக்கு டாடா காட்டியவர் முகுல் ராய்க்கு வழங்கிய இசட் பாதுகாப்பு வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Baja ,security ,mugul rai ,New Delhi ,Z-Division ,Taviya Mukhul Rai ,Trinamool Congress ,Mukhul Raik ,Tata ,
× RELATED சட்டசபை தேர்தல் முடிவுகள்;...