×

தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது: மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணக் கோரிக்கை

நாகை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 மீனவர்களையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் முல்லைத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி நாகை மீனவர்களின் படகை சிறைபிடித்தனர். அதனை தொடர்ந்து இலங்கை திரிகோணமலை முகாமுக்கு அனைவரும் அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று அந்நாட்டு மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ள மீனவர்கள் திரிகோணமலை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் தாங்கள் சிறை சென்று திரும்புவது வாடிக்கையாகி விட்டதாக வேதனை தெரிவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட பங்குகளை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்படுவதாகவும் கூறி வருகின்றனர்.


Tags : Tamil Nadu Fishermen ,Sri Lanka Navy , 9 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy: Demand for permanent solution to fishermen problem
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்