×

தொடரும் அவலம்!: டெல்லியில் பெண்களுக்கு எதிராக 1,100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு.. ப.சிதம்பரம் கடும் கண்டனம்..!!

சென்னை: டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், டெல்லியில் இந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி வரை 1,100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் பதியப்பட்ட 1,033 பாலியல் வன்கொடுமை வழக்குகளை விட அதிகமாகும். பாலியல் துன்பு றுத்தல், வரதட்சணை கொடுமை என கடந்த ஆண்டை விட டெல்லியில் வழக்குகள் அதிகரித்துள்ளன.

டெல்லி காவல்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது குற்றங்கள் அதிகரிக்க என்ன காரணம் கூறப்போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, கருப்புச் சட்டை அணிவோர் மக்கள் நம்பிக்கையை பெற மாட்டார்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு பதிலடி தரும் வகையில் ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் . சனாதன தர்மத்தை நம்புவோரைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்து மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தவர் பெரியார் என குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் குற்றம் - டெல்லி காவல்துறையின் தரவுகள்:

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தலைநகர் டெல்லியில் ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையின் தரவுகள் அடிப்படையில், டெல்லியில் தினமும் சராசரியாக 6 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகிறது. பெண்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கணவர், கணவரின் குடும்ப உறுப்பினர்கள் பெண்கள் மீது குடும்ப வன்முறையில் ஈடுபடுவது 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு  டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 7,887 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 6,747 வழக்குகளை விட அதிகமாகும். வரதட்சனை கொண்டு தொடர்பாக 69 மரணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,P. Chidambaram , Delhi, women, 1,100 sexual assaults, P. Chidambaram
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி