மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!

மும்பை: மகாராஷ்டிராவில் தொழிலதிபர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 390 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலின்படி இந்த மாத தொடக்கம் முதல் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.

8ம் தேதி வரை 6 பிரிவினராக பிரிந்து ஐ.டி. துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் 58 கோடி ரூபாய், 32 கிலோ தங்க, வைர நகைகள் மற்றும் கணக்கில் வராத 390 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கணக்கிட 13 மணி நேரமானதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: