ஆராய்ச்சியில் ஆண் பெண் இருபாலருக்கும் சம வாய்ப்பு: CSIR தலைமை இயக்குநர் N.கலைசெல்வி பேச்சு

சிவகங்கை: வாய்ப்புகளை கண்டறிந்து முறையாக பயன்படுத்தினால் ஒவ்வொரு பெண்ணும் சாதனை பெண்ணாக  வரமுடியும் என்று சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழு தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள N.கலைசெல்வி தெரிவித்துள்ளார். நாட்டின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமாக விளங்கும் சிஎஸ்ஐஆர் குழுவில் பெண் ஒருவர் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த N.கலைசெல்வி தமிழ்வழி கல்வியில் கல்வி பயின்றவர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் செய்டியாளர்களிடம் பேசிய அவர் அறிவியல் ஆராய்ச்சியில் ஆண், பெண் இருபாலருக்கும் சம வாய்ப்புகள் உள்ளதாக கூறினார். ஆராய்ச்சியில் ஈடுபாடுடன் செய்தால் தமக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் பல நூறு கோடிகளை கொட்டி நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக  N.கலைசெல்வி கூறியுள்ளார்.

தாய்நாட்டை உலக அரங்கில் அறிவியல் தொழில்நுட்பத்தில் முதன்மை நாடாக மாற்ற ஆண், பெண் இருபாலரும் முன் வரவேண்டும் அவர் கேட்டு கொண்டுள்ளார். தாய்மொழியை முழுமையாக உள்வாங்கி கொண்டால் எந்த மொழியையும் கற்க முடியும் என்று கலைசெல்வி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தாய்மொழியில் அறிவியலை கற்கும் போது முழுமையாக உள்வாங்கி கொள்ள முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். நாடு முழுவதும் 38 ஆராய்ச்சி மையங்களிலும் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் கலைசெல்வி தெரிவித்துள்ளார்.

Related Stories: