மின்சார சட்ட திருத்த மசோதா தமிழகத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்: வேல்முருகன் அறிக்கை

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  ஒன்றிய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதா இந்தியாவை இருளில் தள்ளும் ஒரு மோசமான திட்டமாகும். மிக மோசமான பாதிப்பை தமிழ்நாட்டு மக்கள் சந்திப்பார்கள்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு போன்ற பயன்மிகுந்த திட்டங்கள் ரத்தாகும் அபாயம் உள்ளது. இந்த மின்சார சட்டத்தின் திருத்தத்தின் சட்ட முன்வரைவை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அச்சட்ட வரைவை ஏற்றுக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: